போலிகள் என்றதும் நித்தியானந்தா நினைவில் வருகிறாரா? நான் இங்கு அந்த போலிகளைக் குறித்து சொல்ல வரவில்லை. சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசப்படும் போலி மருந்துகள் குறித்து தான். இத்தகைய போலி மருந்துகள் இன்று மட்டுமல்ல, காலாகாலமாய் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை இப்போது அதிகம் பேசப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமா இது பிரச்சினை. போலிமருந்துகள் தயாரிப்பு மயங்களும் விற்பனைத் தளங்களும் உலகில் பரவலாக அனைத்து நாடுகளிலும் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (Source: http://www.who.int/bulletin/volumes/88/4/10-020410/en/index.html)
இத்தகைய போலிகள் மருத்துவத் துறையில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் தான் என்கிறது, தினமணித் தலையங்கம்: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=209978&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%௮
தகவல் அறியும் உரிமச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு என பல்வேறு நல்ல வழிகாட்டுதல்களின் மத்தியிலும் இவைகள் பெருகக் காரணம் என்ன?
மக்களின் அலட்சியமும் அரசின் மெத்தனப்போக்குமே இத்தகைய போலிகள் மலிந்ததற்குக் காரணம்.
விழித்திட வேண்டியது நாம் - அதற்கு வழிவகுத்து கொடுத்திட வேண்டியது அரசு.
No comments:
Post a Comment