Monday, December 21, 2009

மிஷன் மருத்துவமனைகளை உயிர்ப்பிப்பது எப்படி?

கடந்த 9 ஆண்டுகளாக மிஷன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்து விட்டு, தற்போது சூழ்நிலைகளின் நிமித்தமாக கடந்த 8 மாதங்களாக தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மிஷன் மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிக சம்பளம் ஆனால் குறைவான பொறுப்புகள்... இருப்பினும் எனது மனமும் இதயத்துடிப்பும் மிஷன் மருத்துவமனைகளின் மீதிருந்து இன்னமும் விடுபட்டுவிடவில்லை.

நான் இது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, ஜாமக்காரன் பத்திரிக்கையில் வாசித்த சேலம் பெத்தேல் மருத்துவமனையைக் குறித்த செய்தி இதுபற்றிய சிந்தனையை இன்னமும் தூண்டிவிடுவதாக இருந்தது.

அதனை இங்கே http://www.jamakaran.com/tam/2009/december/bethel_hospital.htm படித்து, மிஷன் மருத்துவமனைகளை உயிர்ப்பிக்கும் பணிக்கு தங்களின் மேலான அலோசனைகளை இங்கே பதிவிடலாமே!