Saturday, November 14, 2009

நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்

வருடந்தோறும் நவம்பர் 14 என்றாலே, நமக்கு நினைவிற்கு வருவதெல்லாம், குழந்தைகள் தினம் தான். உலகில் பல்வேறு தினங்களில் இது அனுசசரிக்கப்படுகையில், இந்தியாவில் குழந்தைகள் மீது பரிவு கொண்ட நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 - குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதுவே குழந்தைகள் தினம் வெகுவிமரிசையாக அனுசரிக்கப்பட காரணம் என்றால், அது மிகையல்ல.


ஒரு தலைமுறை போய், அடுத்த தலைமுறையில் பலவிசயங்கள் மறக்கப்படும் நிலை போன்று, விரைவிலேயே முக்கியத்துவம் குறைந்த நாளாக மாறப்போவதில் ஒன்று இந்த குழந்தைகல் தினம். காரணம், நேரு பழையவராய் ஆகிவருவதாலோ, குழந்தைகளெல்லாம் முன்னேறி வருவதாலோ அல்ல... காரணம், உலக அளவில் முக்கியமான நாளாக வேகமாக உருவெடுத்து வரும் உலக சர்க்கரை நோய் தினமே ஆகும்.


சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலினைக் கண்டுபிடித்த ’பிரெட்ரிக் பேண்டிங்’ என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக சர்க்கரை நோய் கழகத்தினால் 1991 முதல் உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்பட பரிந்துரைக்கப் பட்டது. 2007 முதல் ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து இதற்கு உத்வேகம் கொடுத்து வருகிறது.


அடுத்த நான்கு வருடங்களுக்கு (2009-2013) இத்தினத்தின் மையக்கருத்து , “சர்க்கரை நோய்க்கல்வி மற்றும் தடுப்பு”. உலகில் (குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும்) வேகமாக பெருகி நம்மை மிரள வைக்கும் சர்க்கரை நோய் பற்றி, மேலும் அறிந்து கொள்ள:

http://www.worlddiabetesday.org/

http://www.idf.org/

No comments:

Post a Comment